ஆளுநராக இருந்தாலும், அண்ணன் மகளாகஅழுது கொண்டிருக்கிறேன்! வசந்தகுமார் மறைவுக்கு தமிழிசை இரங்கல்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார். அவருக்கு வயது 70. ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொரோனா உறுதியானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 7 மணியளவில் எம்.பி. வசந்தகுமார் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது மறைவிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “ சித்தப்பா ! நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது… என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்… அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம்… இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு,
தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும்,துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்…

ஆளுநராக இருந்தாலும், அண்ணன் மகளாகஅழுது கொண்டிருக்கிறேன்! வசந்தகுமார் மறைவுக்கு தமிழிசை இரங்கல்

இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “ சித்தப்பா ! நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது… என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்… அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம்… இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு,
தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும்,துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்…

சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது ,சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது… வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது… கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் … கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது… ஆளுநராக இருந்தாலும்
அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்…” எனக் குறிப்பிட்டுள்ளார்.