ஆன்மீக அரசியலை விடுங்க,நான் அரசியல் பேசமாட்டேன் – தமிழிசை செளந்தரராஜ்

 

ஆன்மீக அரசியலை விடுங்க,நான் அரசியல் பேசமாட்டேன் – தமிழிசை செளந்தரராஜ்

கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் தன்னலமற்று சேவையாற்றியதை பாராட்டும் விதத்தில் இந்த கொரானா மேலாண்மை இந்திய விருது திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் ஜி சுபாஷ்சந்திராவுக்கு வழங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் சுகாதாரதுறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்,துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆன்மீக அரசியலை விடுங்க,நான் அரசியல் பேசமாட்டேன் – தமிழிசை செளந்தரராஜ்

விழாவில் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “கடைசியாக எத்திராஜ் கல்லூரியில் பங்கேற்ற நிகழ்ச்சி. அதன் பின்
9 மாதங்களுக்குப் பிறகு இன்று தான் முதல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இனி தான் தெலங்கானாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கோவிட் தடுப்பு முறைகள் குறித்து தெலங்கானா முதல்வர் கூறியபடி தமிழக சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசினேன். தமிழகத்தில் வழங்கப்படும் அம்மா பரிசுப் பெட்டகம் திட்டத்தைப் பார்த்துத் தான் தெலங்கானாவில் இத்திட்டத்தை கொண்டு வந்தேன்.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள நல்ல திட்டங்களை தெலங்கானாவிலும் கொண்டு வருகிறோம். இரண்டு மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களை கொண்டு சேர்க்கும் பாலமாக நான் இருப்பேன். ஆளுநர் அரசியல் பேசமாட்டேன். ஆன்மீக அரசியல் பேசப்படும் காலகட்டம் இது. நாம் ஆன்மீக அறிவியலை பின்பற்ற வேண்டும்” எனக் கூறினார்.