புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பில்லை – தமிழிசை

 

புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பில்லை – தமிழிசை

புதுச்சேரியில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உள்ளது என்றும் வரும் நாட்களில் நோய்த்தொற்று மற்றும் இறப்பு விகிதம் குறைந்தால் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பில்லை – தமிழிசை

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் சுகாதாரத்துறைக்கு காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் கவச உடை, முக கவசம் உள்ளிட்டவைகளை சுகாதாரத்துறைக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ““தடுப்பூசி உங்கள் தெருக்களில்” என்ற புதிய திட்டத்தின் அடிப்படையில் இன்று மூலம் வீதிகளில் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுவதால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உரிய மருத்துவ வசதியுடன் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போதிய அளவு தடுப்பூசி உள்ளது. இதேபோல் தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது.

4 தினங்களில் கொரோனா தாக்கும் குறைந்தால் மேற்கொண்டு கடைகள் திறந்து இருக்கும் நேரத்தை அதிகரித்து தளர்வுகள் அளிக்கப்படும். மக்களுக்கு ரூ.3ஆயிரம் நிவாரணமாக வழங்குவதற்கான கோப்பிற்கு எந்த தயக்கமும் இன்றி ஒப்புதல் அளிக்கப்படுள்ளது. பொருளாதார அடிப்படையில் விரைந்து நிவாரணத் தொகையை முதலமைச்சர் வழங்குவார்” என தெரிவித்தார்.