புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நாளை பொறுப்பேற்பு!

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நாளை பொறுப்பேற்பு!

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நாளை பொறுப்பேற்கிறார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ள நிலையில், எம்எல்ஏக்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பாஜகவின் தூண்டுதலின் பேரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இவ்வாறு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே சமயம் முதல்வர் நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 16 இடங்களில் 14 இடங்கள் மட்டுமே உள்ளதால் முதல்வர் நாராயணசாமி அமைச்சரவைக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நாளை பொறுப்பேற்பு!

இதனிடையே ஆளும் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நேற்று அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நாளை பொறுப்பேற்பு!

இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் புதுச்சேரி ஆணையர் வழங்கினார். இதையடுத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக தமிழிசை சௌந்தரராஜன் நாளை பொறுப்பேற்கிறார். தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆகக் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்ட நிலையில் நாளை காலை 9 மணிக்கு பொறுப்பேற்கிறார் தமிழிசை