விரைவில் பள்ளிகளை திறக்க வாய்ப்பு – தமிழிசை சௌந்தரராஜன் தகவல்!

 

விரைவில் பள்ளிகளை திறக்க வாய்ப்பு – தமிழிசை சௌந்தரராஜன் தகவல்!

புதுச்சேரியில் விரைவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

நாடெங்கிலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பின் காரணமாக பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது பாதிப்பு குறைந்து இருக்கும் சூழலிலும் மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் மாநில அரசுகள் மிகுந்த கவனத்துடன் பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அங்கு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்ததால் அந்த முடிவில் இருந்து புதுச்சேரி மாநில அரசு பின்வாங்கியது.

விரைவில் பள்ளிகளை திறக்க வாய்ப்பு – தமிழிசை சௌந்தரராஜன் தகவல்!

இந்த நிலையில் விரைவில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான வாய்ப்பிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌவந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கலைக்கல்லூரியின் பவள விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என கூறப்படுகிறது. அதனால் பள்ளிகளை திறக்க வேண்டாம் என சமூக ஆர்வலர்களும் மருத்துவர்களும் கூறுகிறார்கள். ஆனால், குழந்தைகளின் எதிர் காலத்தை முன்னிட்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. விரைவில் பள்ளிகளை திறப்பதற்கான வாய்ப்புள்ளது என்று கூறினார்.

மேலும் மேகதாது அணை பிரச்னை குறித்து பேசிய அவர், ஆளுநர் என்பதால் இந்த விவகாரத்தை பற்றி பேச விரும்பவில்லை. எந்த நதி நீராக இருந்தாலும் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சரியாக கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார். முன்னதாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.