தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்!

 

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்!

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனமிக்கப்பட்டுள்ளார்.

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்!

இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தேனி மாவட்டத்தை கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், தேனி வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

அதில் தேனி தெற்கு மாவட்டத்தில் கம்பம் மற்றும் ஆண்டிபட்டியும், தேனி வடக்கு மாவட்டத்தில் போடிநாயக்கனூர் மற்றும் பெரிய குளமும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பிரிக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் அடிப்படையில், தேனி வடக்கு மற்றும் தெற்கு ஆகிய மாவட்ட கழகங்கள் செயல்படும். அதன்படி புதிதாக அமையப்பெற்ற மாவட்டங்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.