ரஜினியின் கட்சி தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு உண்மையா?- தமிழருவி மணியன்

 

ரஜினியின் கட்சி தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு உண்மையா?- தமிழருவி மணியன்

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி தெரிவிப்பதாகவும் கூறினார். இதனிடையே ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா ரஜினியின் கட்சியை பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல் கட்சியின் சின்னமாக ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மக்கள் சேவை கட்சி உண்மையா என்ற தகவலுக்கு தமிழருவி மணியன் விளக்கமளித்துள்ளார்.

ரஜினியின் கட்சி தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு உண்மையா?- தமிழருவி மணியன்

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிமக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், “கட்சியின் அடிப்படை கட்டமைப்புகள் தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். ரஜினி என்ன சொல்கிறாரோ அதுதான் கட்சி பெயர். கட்சி அறிவிப்பு தொடர்பாக ரஜினியின் மூலம் செய்தி வந்தால் மட்டுமே அது உண்மையான செய்தி” எனக் கூறினார். தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கும் படி, நிர்வாகிகளுக்கு தமிழருவி மணியன் அறிவுறுத்தினார்.