சென்னை மாநகராட்சி அலுவலக கட்டடத்தின் மீதிருந்த ‘தமிழ் வாழ்க’ பெயர் அகற்றம்!

 

சென்னை மாநகராட்சி அலுவலக கட்டடத்தின் மீதிருந்த ‘தமிழ் வாழ்க’ பெயர் அகற்றம்!

சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை Grand Western Trunk Road என தமிழக அரசு திடீரென மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில நெடுஞ்சாலை துறை இணையத்திலும் பெரியார் ஈ.வே.ரா நெடுஞ்சாலை என்பதற்கு பதிலாக Grand western trunk road என மாற்றி எழுதப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என்று மாற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து Grand Western Trunk Road என்ற பெயர் பலகையை திராவிடர் விடுதலை கழகத்தினர் கருப்பு மை பூசி அழித்தனர். இதுமட்டுமின்றி பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரையும் மாற்றி தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டது.

சென்னை மாநகராட்சி அலுவலக கட்டடத்தின் மீதிருந்த ‘தமிழ் வாழ்க’ பெயர் அகற்றம்!

இந்த சூழலில் சென்னை மாநகராட்சி அலுவலக கட்டடத்தின் மீது இருந்த ‘தமிழ் வாழ்க’ பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. ஏன்? இந்த திடீர் நடவடிக்கை, யார் சொல்லி யார் செய்தது? என்பன உள்ளிட்ட கேள்விகளை முன்வைக்கும் தமிழ் ஆர்வலர்கள், இச்செயலுக்கு வன்மையான
கண்டனங்களை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது, பிரதமர் மோடி பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தபோது பாதுகாப்பு காரணங்களுக்காக பலகை அகற்றப்பட்டதாக சிலர் தெரிவிக்கின்றனர். ஒருசிலரோ பராமரிப்பு பணியின் காரணமாக பலகை கழட்டப்பட்டு வேலை நடைபெற்றுவருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.