“குஜராத்தில் உள்ள தமிழ் பள்ளியை மூடக்கூடாது” : தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்!

“குஜராத்தில் உள்ள தமிழ் பள்ளியை மூடக்கூடாது” :  தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்!

குஜராத்தில் உள்ள தமிழ் பள்ளியை மூடக்கூடாது என குஜராத் முதல்வருக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

“குஜராத்தில் உள்ள தமிழ் பள்ளியை மூடக்கூடாது” :  தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்!

கடந்த 1971ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மணி நகரில் தமிழ் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது கொரோனா மற்றும் மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி அப்பள்ளியை மூடுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் அங்குள்ள தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“குஜராத்தில் உள்ள தமிழ் பள்ளியை மூடக்கூடாது” :  தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்!

இந்த நிலையில் குஜராத்தின் மணி நகரில் உள்ள தமிழ் பள்ளியை மூடக்கூடாது என குஜராத் முதல்வரிடம், தமிழக முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்வழியில் கற்பிக்கும் பள்ளி மூடப்படும் செய்தி அறிந்து வேதனையடைந்தேன். தமிழக தொழிலாளர்கள் குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பள்ளிக்கூடத்தை மூட வேண்டாம். மாறாக தமிழ்வழி பள்ளி செயல்படுவதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்க தயார்” என்று கூறியுள்ளார்.