தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய ஈபிஎஸ் – ஓபிஎஸ்

 

தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய ஈபிஎஸ் – ஓபிஎஸ்

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து ‘தமிழ்ப் புத்தாண்டு’ வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய ஈபிஎஸ் – ஓபிஎஸ்

சித்திரை 1 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடப்படும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்த நன்னாளில் பேரன்பு கொண்ட தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். பழம் பெருமையும் இலக்கிய வளமும் நிறைந்த நம் தாய்மொழியாம் தமிழ்மொழி பேசும் தமிழ் மக்கள் பன்னெடுங்காலமாய் பருவங்களின் சுழற்சியையும், சரித்திர கோட்பாடுகளையும் ஆய்ந்து அறிந்து, அதன் அடிப்படையில் ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய ஈபிஎஸ் – ஓபிஎஸ்

புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளை பெற்று, வழிமுறைக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையில் மேலும் உயர்வடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முழு அர்ப்பணிப்புடன் மக்கள் பணியாற்றும் என்பதை என்னால் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் இன்பமும் பெருக வேண்டும். எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும். தமிழர் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் மனதார வாழ்த்தி உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எங்களது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.