மீண்டும் சேதப்படுத்தப்பட்ட தமிழ் பெயர் பலகை… கர்நாடக எல்லையில் பரபரப்பு…

 

மீண்டும் சேதப்படுத்தப்பட்ட தமிழ் பெயர் பலகை… கர்நாடக எல்லையில் பரபரப்பு…

ஈரோடு

ஈரோடு மாவட்ட தாளவாடி அருகே தமிழக-கர்நாடக எல்லையில் தமிழில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகை மீண்டும் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், தமிழக – கர்நாடக மாநில வனப்பகுதியின் எல்லையில் பைனாபுரம் அருகே எத்திக்கட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்கு தமிழக அரசின் சார்பில் ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றிய வரவேற்பு பலகையும், நெடுஞ்சாலைத் துறையின் எல்லை முடிவு பலகையும் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை இரு பலகைகளையும் மர்மநபர்கள் சேதப்படுத்திவிட்டு தப்பியோடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாளவாடி போலீசார் மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் சேதப்படுத்தப்பட்ட தமிழ் பெயர் பலகை… கர்நாடக எல்லையில் பரபரப்பு…

இருமாநில எல்லைப் பகுதியான பைனாபுரம் கிராமம் எத்திக்கட்டை, அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதாலும், ஆள்நடமாட்டம் இல்லாததாலும், யார் இந்த பலகைகளை சேதப்படுத்தி இருப்பார்கள் என்பது மர்மமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். முன்னதாக கடந்த 10ஆம் தேதி அன்று கர்நாடக எல்லையில் உள்ள ராமபுரம் கிராமத்தில் தமிழ் பெயர் பலகைகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், இதுதொடர்பாக கன்னட சலுவாலியா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.