தமிழகத்தின் ‘டிரெண்டிங்’ பேச்சாளர் அமைச்சர் ஜெயக்குமார் – சுவராஸ்யத் தகவல்கள்

 

தமிழகத்தின் ‘டிரெண்டிங்’ பேச்சாளர் அமைச்சர் ஜெயக்குமார் – சுவராஸ்யத் தகவல்கள்

ஒருகாலத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல..தொண்டர்களும் கூட தலை சிறந்த பேச்சாளர்களாக இருந்தார்கள். ஊருக்கு ஊர், மேடைகளில் கழகப் பேச்சாளர்களின் வீர வசனங்கள் ‘நறுக்’ தெரிக்கும். இதில் நகைச்சுவைப் பேச்சாளர்களும் உண்டு. இப்போது சிறந்த பேச்சாளர்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. இந்த நிலையில் ரத்தினச் சுருக்கமான பேச்சு,பஞ்ச் டயலாக், சூழ்நிலைகளை முறியடிக்கும் குறும்பான பதில்கள்,நகைச்சுவையுடன்

தமிழகத்தின் ‘டிரெண்டிங்’ பேச்சாளர் அமைச்சர் ஜெயக்குமார் – சுவராஸ்யத் தகவல்கள்

‘நறுக்’கான தகவல்கள்,எம்.ஜி.ஆர் பாடல்கள் என இந்தக் காலத்து “டிரண்டிங்” பேச்சாளராக அனைவரையும் கவர்ந்து வருகிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
அமைச்சர் ஜெயக்குமார் பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை அறிவியல் படிப்பு முடித்து மெட்ராஸ் சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்றவர். அதிமுக சார்பாக 1991, 2001, 2006, 2011 மற்றும் 2016 தேர்தலில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். தற்போது மீன்வளம், நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சராக பணியாற்றும் ஜெயக்குமாருக்கு 61 வயதாகிறது.அவரது பேச்சு பற்றிய சில சுவாரஸ்யங்களைக் காணலாம்

தமிழகத்தின் ‘டிரெண்டிங்’ பேச்சாளர் அமைச்சர் ஜெயக்குமார் – சுவராஸ்யத் தகவல்கள்


அமைச்சர் ஜெயக்குமாருக்கு பேச்சுக்கலை மட்டுமல்ல.. டூயட் பாடவும் தெரியும். சண்டை போடவும் தெரியும். சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளையொட்டி நடந்த விழாவில் மேடையேறிய அமைச்சர் ஜெயக்குமார் “சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற பாடலைப் பாடி அசத்தினார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் குத்துசண்டை போட்டி விழாவில் கலந்து கொண்ட அவர், தனது கைகளில் ‘கிளவ்ஸ்’களை கட்டிக் கொண்டு பாக்சிங்கில் ஈடுபட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
சமீப காலமாக இணையதளம் வாயிலாக திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவது குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் ‘திமுகவில் ஒசாமா பின்லேடன், ட்ரம்ப் உள்ளிட்ட பெயர்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நயன்தாராவுக்கு கூட திமுக உறுப்பினர் அட்டை வழங்கலாம். நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், ஒரே நாளில் 72 லட்சம் பேரை எப்படி சேர்க்க முடியும். அனைத்து பெருமையும் பிரசாத் கிஷோருக்கே சேரும்’ என்றார்.

தமிழகத்தின் ‘டிரெண்டிங்’ பேச்சாளர் அமைச்சர் ஜெயக்குமார் – சுவராஸ்யத் தகவல்கள்


‘மகாபாரதம் முப்பாட்டன்களின் சரித்திரம் என கமல்ஹாசன் கூறியுள்ளாரே?’ என ஒரு நிருபர் கேட்ட போது “அவர் திடீரென நாத்திகவாதி என்பார், திடீரென ஆத்திகவாதி என்பார். அவர் சொல்வது யாருக்கும் புரியாது. என்ன வேண்டுமானாலும் சொல்வார் என்றார்.
அமைச்சர் ஜெயக்குமார் பல சமயங்களில் ஆங்கிலம் கலந்து பேசுவார்.சமீபத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பிரச்சனை வந்த போது, அமைச்சர் ஜெயக்குமாரிடம் “நாளை தேய்பிறையில் முதல்வர் வேட்பாளர் முடிவு அறிவிக்கப்படுமா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் “நாங்க எப்பவுமே ராகு காலம், எமகண்டமெல்லாம் பார்ப்பதில்லை. “ஆல் டேஸ் ஆர் கோல்டன் டேஸ்” கடவுளுடைய படைப்பில் எல்லா நாளும் இனிய நாளே” என்றார்.

தமிழகத்தின் ‘டிரெண்டிங்’ பேச்சாளர் அமைச்சர் ஜெயக்குமார் – சுவராஸ்யத் தகவல்கள்


அமைச்சர் ஜெயக்குமார் தனது பேச்சில் சில சமயம் சிலரை வம்புக்கும் இழுப்பார். சென்னை மாதவரம் அருகே கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவுக்கு சென்றது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நீரு பூத்த நெருப்பு தற்போது புகைந்து கொண்டிருக்கிறது முதல் விக்கெட் கு.க.செல்வம்.துரைமுருகன் வருத்தத்தில் இருக்கிறார், பொதுச்செயலாளர் பதவிக்குதான் அவர் எதிர்பார்த்து காத்திருந்தார். அவருக்கு பதவி கொடுக்காததால் அடுத்த விக்கெட் அவராகத்தான் இருக்கும்.அவர் விருப்பட்டால் அதிமுகவில் சேரலாம்’ என்றார்.

தமிழகத்தின் ‘டிரெண்டிங்’ பேச்சாளர் அமைச்சர் ஜெயக்குமார் – சுவராஸ்யத் தகவல்கள்


அமைச்சர் ஜெயக்குமார் சில சமயங்களில் நக்கலாகவும் பேசுவார்.எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட வந்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் “ கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா?” என்றொரு கேள்வியைக் கேட்டனர். இதற்கு “ஆளில்லாத கடையில் அதிமுக அரசு டீ ஆத்தாது” என்று பதிலளித்தார். துக்ளக் பத்திரிகை விழாவில் பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது இது பற்றி ஜெயக்குமாரிடம் கேட்ட போது “பரட்டை பத்த வச்சுட்டாரு. தமிழகம் முழுவதும் பத்திகிட்டு எரியுது” என்றார்.
இது போல் சுருக்கமாக பதிலளிப்பது அமைச்சர் ஜெயக்குமாரின் பாணி. திருவள்ளுவர் தினத்தன்று அதிமுக பற்றி அவர் கூறும்போது “திருவள்ளுவர் சாதி, இனம், மதம் என அனைத்தையும் கடந்தவர், அந்த நிலையில்தான் அதிமுகவும் உள்ளது என்றார்.
பத்திரிக்கையாளர்கள் எப்படி கேள்விகள் கேட்டாலும் சிரித்துக் கொண்டே பதில் சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார் எந்த நிருபரிடமும் கோபித்துக் கொண்டதுமில்லை. எந்த நிருபரும் அவரை வெறுத்ததுமில்லை.