தமிழகத்தின் அடுத்தடுத்த மூவ்மெண்ட்… பம்பரமாக சுற்றும் திமுகவினர்…!

 

தமிழகத்தின் அடுத்தடுத்த மூவ்மெண்ட்… பம்பரமாக சுற்றும் திமுகவினர்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்து வந்த திமுக தற்போது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இனி அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்ன என்பதை இந்த செய்தியில் காணலாம்.

தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி நடக்க உள்ள நிலையில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதைப்போல் திமுக வெற்றி வேட்பாளர்கள் தங்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் அடுத்தடுத்த மூவ்மெண்ட்… பம்பரமாக சுற்றும் திமுகவினர்…!

இதையடுத்து நாளை சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயத்தில் கூடவுள்ள நிலையில் சட்ட மன்ற தலைவரை தேர்வு செய்வார்கள்.

இதனிடையே முதல்வர் பொறுப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வந்த எடப்பாடி பழனிசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கியுள்ளார்.
இதனால் வரும் 7ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழகத்தின் அடுத்தடுத்த மூவ்மெண்ட்… பம்பரமாக சுற்றும் திமுகவினர்…!

இதையடுத்து சபாநாயகர் தேர்வு நடைபெறும்.

அத்துடன் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எம்எல்ஏக்கள் ஆக பதவி ஏற்பார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை அதிமுக அரசு தாக்கல் செய்தது. அதேபோல் வரும் அக்டோபர் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் .எனவே புதிதாக பதவியேற்கும் அரசு அதற்கான கால கட்டத்திற்குள் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.