“புதுச்சேரியில் மதவெறி பற்றினால் தமிழகத்தையும் சேர்த்து எரித்துவிடும்” – ரவிக்குமார் எம்பி

 

“புதுச்சேரியில் மதவெறி பற்றினால் தமிழகத்தையும் சேர்த்து எரித்துவிடும்” – ரவிக்குமார் எம்பி

புதுச்சேரியில் மதவெறி நெருப்பைப் பற்ற நாம் அனுமதித்தால் தமிழ்நாடு வீட்டையும் சேர்த்து எரித்துவிடும் என மக்களவை எம்பி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கம் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் ஜனவரி 26இல் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் மூலம் சுமார் 1 லட்சம் பிரசுரங்கள் புதுச்சேரி முழுவதும் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பிரசுரங்களை விழுப்புர எம்பியும் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் இன்று வெளியிட்டார்.

இந்த வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “வட மாநிலங்களில் சட்டத்திற்குப் புறம்பாக குறுக்கு வழியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் அக்கட்சியால் கால் பதிக்க முடியவில்லை. எப்படியாவது இங்கு ஆட்சியமைக்க வேண்டும் என்ற வெறியில் பாஜக மதவெறியைப் பரப்ப முற்படுகிறது.

“புதுச்சேரியில் மதவெறி பற்றினால் தமிழகத்தையும் சேர்த்து எரித்துவிடும்” – ரவிக்குமார் எம்பி

புதுச்சேரியில் மதவெறி நெருப்பைப் பற்ற நாம் அனுமதித்தால் தமிழ்நாடு வீட்டையும் எரித்துவிடும். மதவாதத்தைத் தடுக்க முதற்கட்டமாக சமூக நல்லிணக்கம் காக்க ஒன்றுபடுவோம் என்ற பிரச்சார இயக்கத்தைத் தொடங்கி 1 லட்சம் பிரசுரங்களை விநியோகிக்கின்றனர். மதவெறியிடமிருந்து புதுச்சேரியையும் தமிழ்நாட்டையும் காக்கவே இம்முயற்சி” என்றார்.

சில மாதங்களாகவே தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் லோக்கல் தாதாவாக அராஜகம் செய்பவர்களில் பலரும் பாஜகவில் இணைந்துவருகின்றனர். முன்னாள் ரவுடிகள் இப்போது பாஜக பிரமுகர்களாகச் சுற்றுகின்றனர். ரவுடிகளையும் குண்டர்களையும் வைத்து மக்களை மிரட்டி ஆட்சியமைக்க பாஜக திட்டம் தீட்டுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

“புதுச்சேரியில் மதவெறி பற்றினால் தமிழகத்தையும் சேர்த்து எரித்துவிடும்” – ரவிக்குமார் எம்பி

சமீபத்தில் புதுச்சேரியேவே கலக்கிய தாதா எழிலரசி, புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவர் பல்வேறு கொலை வழக்குகள், கொலை மிரட்டல் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக, புதுச்சேரியின் முன்னாள் சபாநாயகரை வெடிகுண்டு போட்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் பெயர் அடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தேடப்படும் குற்றவாளியான இவரைக் கைதுசெய்ய புதுச்சேரி அரசு ஆணையிட்டிருந்தது.

“புதுச்சேரியில் மதவெறி பற்றினால் தமிழகத்தையும் சேர்த்து எரித்துவிடும்” – ரவிக்குமார் எம்பி

எழிலரசியை ஒப்படைக்குமாறு புதுச்சேரி காவல் துறை பாஜகவிடம் வேண்டுகோள் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 31ஆம் தேதி புதுச்சேரி வருகைதருகிறார்.