முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் மாறும் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

 

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் மாறும் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை கிண்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு’ விழா நடைபெற்றது. அதில், ரூ.4,250 கோடி மதிப்பில் 9 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.7,117 கோடி மதிப்பிலான 5 திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.28,664 கோடி முதலீட்டில் 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் மாறும் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு நிச்சயம் மாறும். தெற்கு ஆசியாவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே தமிழக அரசின் இலக்கு. தொழிலை வர்த்தகமாக கருதாமல் சேவையாக எண்ணி தொழில் முதலீட்டாளர்கள் செயல்படுகின்றனர். தொழில் புரிவது எளிதாகவும் அதன் உரிய சூழலை உருவாக்கவும் உறுதி பூண்டுள்ளேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், கொரோனா காலத்தை கொரோனாவை வென்ற காலமாக மாற்றியுள்ளோம். தமிழக அரசின் துரிதமான செயல்பாடுகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை தமிழக அரசு சமாளிக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.