தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்!

 

தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்!

நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுப்பது என தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் பருவம் முடிய உள்ள நிலையில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இன்னும் கூட வகுப்புகள் தொடங்கப்படாமல் உள்ளன.

தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்!

இத்தகைய சூழலில் தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளதால் வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கடந்த 16ஆம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்!

இந்நிலையில் 1 முதல் முதல் அனைத்து வகுப்பினருக்கும் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்படுகின்றன. மாணவர்கள் பள்ளிக்கு வரும் பட்சத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வகுப்பறைகளில் மாணவர்கள் இருக்கைகள் இடைவெளி கூடியதாக அமைய வேண்டும், சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும், பள்ளிவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.