‘தமிழ்நாடு பெரியார் மண்’ சொல்வது மன்மோகன் சிங்

 

‘தமிழ்நாடு பெரியார் மண்’ சொல்வது மன்மோகன் சிங்

‘கருப்பர் கூட்டம்’ எனும் யுடியூப் சேனல் கடவுள் முருகன் தொடர்பான சர்ச்சையான வீடியோ ஒன்றை வெளியிட்டது. அது இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தியதாகத் தமிழக பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்த‌து. பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது.

‘தமிழ்நாடு பெரியார் மண்’ சொல்வது மன்மோகன் சிங்

உடனே ‘கருப்பர் கூட்டம்’ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சென்னையில் வேளச்சேரியைச் சேர்ந்த செய்தில் என்பவர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி அரியாங்குப்பத்தில் கருப்பர் கூட்டம் சேனலின் தொகுப்பாளர் சுரேந்தர் நடராஜன் என்பவர் காவல் துறையினரிடம் சரணடைந்தார் ‘சரணடைவதற்கு முன் சுரேந்தர், ‘நாங்கள் புத்தகங்களில் உள்ளவற்றைத்தான் சொன்னோம் இந்த வழக்கைத் துணிவோடு எதிர்கொள்வோம்’ என்று செய்தியாளர்களிடம் கூறினார். சென்னையில் உள்ள கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகம் காவல் துறையால் பூட்டப்பட்டது.

‘தமிழ்நாடு பெரியார் மண்’ சொல்வது மன்மோகன் சிங்

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக கோவை சுந்தராபுரம் பகுதியில் இருக்கும் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதிமுக, திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, நாம் தமிழர், திராவிடர் கழகம் எனப் பெரும்பாண்மையான கட்சியைச் சேர்ந்த தலைவர் பெரியாரை அவமதிப்பு செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டனர். சோஷியல் மீடியாவில் பதிவுகள் இட்டனர்.

‘தமிழ்நாடு பெரியார் மண்’ சொல்வது மன்மோகன் சிங்

 

 

இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசியதைக் கண்டித்து ‘எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது’ என்று தமிழில் ட்விட் செய்திருந்தார்.

‘தமிழ்நாடு பெரியார் மண்’ சொல்வது மன்மோகன் சிங்

ராகுல் காந்தியின் ட்விட்டில் கமெண்ட் செய்திருக்கும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘ சாதி மற்றும் மதவாதிகள் தமிழ்நாட்டில் வெற்றுபெற முடியாது காரணம் பெரியார். தமிழகம் பெரியார் மண்’ என்று கூறியிருக்கிறார்.