ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ்போர்ட் பிரிப்பேர்னஸ் இன்டெக்ஸ் பட்டியல் தொடர்பாக தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் வீடியோ பாதிவிட்டுள்ளார். அதில், ஏற்றுமதிக்கான அனைத்து அம்சங்களிலும் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தேசிய அளவில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று பெருமிததத்துடன் கூறியுள்ளார்.

ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

ஏற்றுமதி தொடர்பான ஆய்வறிக்கையை மத்திய அரசின் நிடிஆயோக் கடந்த புதன் கிழமை வெளியிட்டிருந்தது. இதன் படி கடலோர மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஓடிஷா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகியவை ஏற்றுமதியில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இந்தியாவின் 70 சதவிகித ஏற்றுமதியானது மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

ஏற்றுமதிக்கு சாதகமான மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தில் 76.1 சதவிகித புள்ளிகளுடன் குஜராத் உள்ளது. 75.1 சதவிகித புள்ளியுடன் மகாராஷ்டிரா 2வது இடத்திலும், 64.93 புள்ளிகளுடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ஏற்றுமதிக்கு சாதகமான மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் படிக்க இங்கு உள்ள அரசின் கொள்கை, தொழில் செய்வதற்கான சூழல், ஏற்றுமதிக்கான வாய்ப்பு மற்றும் ஏற்றுமதி செயல்திறன் ஆகியவையே காரணம் என்று கூறப்படுகிறது. கொள்கை அடிப்படையில் முதல் இடத்தில் மகாராஷ்டிராவும், அதைத் தொடர்ந்து குஜராத், ஜார்கண்ட் மாநிலங்களும்

ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

உள்ளன. தொழில் செய்வதற்கான சூழல் சரியாக உள்ள மாநிலங்கள் அடிப்படையில் குஜராத் முதல் இடத்தில் உள்ளன. இதைத் தொடர்ந்து டெல்லி, தமிழகம் ஆகியவை உள்ளன. ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஏற்றுமதியில் 46 சதவிகிதம் ஆட்டோமொபைல் துறையிலிருந்து வந்துள்ளது. 19 சதவிகிதம் ஆடைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியிலிருந்தும் வந்துள்ளது.

ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அரசு தொழில் கொள்கை வகுத்து, முதலீட்டை ஈர்த்து சிறப்பாக செயல்படுகிறது. இதுவே, தமிழகம் ஏற்றுமதியில் சிறந்த விளங்கக் காரணமாக உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.