புதிய நோயாளிகள் அதிகரிப்பில் தமிழ்நாடு 5-ம் இடம்! இறப்பு எண்ணிக்கையில்?

 

புதிய நோயாளிகள் அதிகரிப்பில் தமிழ்நாடு 5-ம் இடம்! இறப்பு எண்ணிக்கையில்?

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதுவும் உலகளவில் பாதிப்புகளின் பட்டியலில் இரண்டாம் இடம் இந்தியா. இறப்புகளின் எண்ணிக்கையில் மூன்றாம் இடம் இந்தியாவுக்கு. ஆனால், கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இறங்குமுகமாக இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.50 இலட்சமாகக் குறைந்துள்ளது. (2,50,183). கடந்த 24 மணி நேரத்தில் 19,079 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 22,926 பேர் புதிதாக குணமடைந்தனர்.

புதிய நோயாளிகள் அதிகரிப்பில் தமிழ்நாடு 5-ம் இடம்! இறப்பு எண்ணிக்கையில்?

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரில் 62 சதவீதத்தினர் கேரளா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99 இலட்சத்தைக் கடந்து (99,06,387), ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. குணமடைந்தோரின் வீதம் 96.12 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 96,56,204 ஆக பதிவாகியுள்ளது.

புதிய நோயாளிகள் அதிகரிப்பில் தமிழ்நாடு 5-ம் இடம்! இறப்பு எண்ணிக்கையில்?

புதிதாக குணமடைந்தவர்களில் அதிகபட்சமாக கேரளாவில் 5111 பேரும், மகாராஷ்டிராவில் 4279 பேரும், மேற்கு வங்காளத்தில் 1496 பேரும் குணமடைந்துள்ளனர்.

80.56 சதவீத புதிய தொற்றுக்கள் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. கேரளாவில் 4991 பேரும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3524 பேரும், மேற்கு வங்காளத்தில் 1153 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

புதிய நோயாளிகள் அதிகரிப்பில் தமிழ்நாடு 5-ம் இடம்! இறப்பு எண்ணிக்கையில்?

கடந்த 24 மணிநேரத்தில் 224 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 75.45 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் 59 பேரும், மேற்கு வங்காளத்தில் 26 பேரும், கேரளாவில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்திய மாநிலங்கள் அளவில் புதிய நோயாளிகளின் பட்டியலில் தமிழ்நாடு 5-ம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் கேரளா இருக்கிறது. இரண்டாம் இடம் மகாராஷ்டிரா.

இறப்பு எண்ணிக்கையில் தமிழ்நாடு 6-ம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்டிராவும் இரண்டாம் இடத்தில் மேற்கு வங்கமும் இருக்கின்றன.