இன்னும் ஆறே நாட்களில் தமிழக ஐபிஎல்… துள்ளிக்குதிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!

 

இன்னும் ஆறே நாட்களில் தமிழக ஐபிஎல்… துள்ளிக்குதிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!

சர்வதேச புகழ்பெற்ற ஐபிஎல் தொடரைப் போலவே தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் என்ற பெயரில் நடத்தப்படுகிறது. 2016ஆம் ஆண்டு இந்தத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், சேலம் ஆகிய எட்டு நகரங்களை மையமாகக் கொண்ட அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடராக நடத்தப்படுகிறது. இந்தத் தொடரின் ஐந்தாவது சீசன் இம்மாதம் தொடங்கவிருப்பதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது.

இன்னும் ஆறே நாட்களில் தமிழக ஐபிஎல்… துள்ளிக்குதிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஜூன் மாதம் நடைபெறவிருந்த டிஎன்பிஎல் கொரோனா சூழலால் ஒரு மாதம் தள்ளிப்போனது. அதாவது ஜூலை 19ஆம் தேதி முதல் போட்டி நடக்கிறது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி இறுதிப்போட்டி நடப்பது போல அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக வெவ்வேறு மைதானங்களில் நடத்தப்படாமல் அனைத்துப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே நடத்தப்படவுள்ளன. மொத்தமாக 28 லீக் போட்டிகள், 4 பிளே-ஆப்கள், 1 பைனல் சேப்பாக்கத்தில் ஆடியன்ஸ் இல்லாமல் நடத்தப்படும்.

இன்னும் ஆறே நாட்களில் தமிழக ஐபிஎல்… துள்ளிக்குதிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!

கடந்தாண்டு தொடர் நடத்தப்படவில்லை. 2019ஆம் ஆண்டு சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை வென்றது. சூப்பர் கில்லிஸ் மொத்தமாக இரு கோப்பைகளைத் தட்டிச் சென்றுள்ளது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு கோப்பைகளைப் பெற்றுள்ளன. ஒரே நாளில் இரு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாலைஒ 3.30 அணிக்கு ஒரு போட்டியும் 7.30 மணிக்கு மற்றொரு போட்டியும் நடக்கும்.

இன்னும் ஆறே நாட்களில் தமிழக ஐபிஎல்… துள்ளிக்குதிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல வீரர்களான அஸ்வின், சாய் கிஷோர், சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி, வாசிங்டன் சுந்தர் ஆகியோர் இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டார்கள். அவர்கள் இந்திய அணிக்காக வெவ்வேறு தொடர்களில் ஆடவிருப்பதால் இதில் அவர்களால் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் Star Sports Tamil சானலில் ஒளிப்பரப்படும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராக்கன்கள், கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்கள், ரூபி திருச்சி வாரியர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சீச்செம் மதுரை பாந்தர்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன.