தொடர் சர்ச்சைகளில் சிக்கும் தமிழக போலீசார்… சாத்தான்குளம் டு திருப்பத்தூர் 

 

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் தமிழக போலீசார்… சாத்தான்குளம் டு திருப்பத்தூர் 

கொரோனா ஊரடங்கு காலக்கட்டம் தொடங்கிய மார்ச் மாதத்தில் தமிழகம் முழுவதும் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. தங்களின் உயிரைப் பணயம் வைத்து ஒவ்வொருவரும் வேலையைப்பார்த்தனர். ஊரடங்கில் ஊரே வீட்டுக்குள் முடங்கியிருந்த நேரத்தில் கண்ணுக்கு தெரியாத கோவிட் 10 வைரஸோடு முன்களப்பணியாளர்கள் போரிட்டு வருகின்றனர். முன்களப்பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் தமிழக போலீசார்… சாத்தான்குளம் டு திருப்பத்தூர் 

ஆனால் சென்னை கீழ்ப்பாக்க தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் கொரோனாவுக்கு உயிரிழந்தபோது அவரின் சடலத்தை அடக்கம் செய்ய மாநகராட்சி அதிகரிகள், ஊழியர்கள், மருத்துவரின் நண்பர்கள் ஆம்புலன்ஸில் வந்தனர். கல்லறை தோட்டம் அருகே வந்தபோது, அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் சேதப்படுத்தப்பட்டது. அதனால் நடுரோட்டில் டாக்டரின் சடலம் அநாதையாக விடப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள் என சிலரின் மண்டை உடைந்தது. இந்தத் தகவல் காவல் துறையினருக்கு தெரிந்ததும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் தமிழக போலீசார்… சாத்தான்குளம் டு திருப்பத்தூர் 

பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் அண்ணாநகர் வேலங்காடு மயானத்தில் மருத்துவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சென்னை போலீசார் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். முன்களப்பணியாளரான மருத்துவர் ஒருவரின் இறுதி சடங்கில் நடந்த வன்முறை சம்பவத்துக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதன்பிறகுதான் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம், தகனம் செய்வதில் பெரியளவில் எதிர்ப்புகள் கிளம்பவில்லை. ஆனால் புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை தூக்கி வீசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் தமிழக போலீசார்… சாத்தான்குளம் டு திருப்பத்தூர் 

கொரோனா ஊரடங்கில் விதிகளை மீறி கடைகளைத்திறந்து வைத்திருந்ததாக தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிபிசிஐடி போலீசார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள், காவலர்கள் என 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது, சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை சிபிஐ விசாரித்துவருகிறது. இந்தச் சம்பவத்துக்கு பிறகு சாத்தன்குளம் போலீசார் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக காவல்துறையினர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் தமிழக போலீசார்… சாத்தான்குளம் டு திருப்பத்தூர் 

அதன்பிறகு தமிழக காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கனிவாக நடத்தப்பட வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதுதொடர்பாக டிஜிபி திரிபாதியும் சுற்றறிக்கையை அனுப்பிவைத்தார். சாத்தான்குளம் சம்பவத்துக்குப்பிறகு ஒட்டுமொத்த போலீசாருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கில் பணியாற்றிய மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுதான் தமிழக காவல் துறையின் முதல் உயிரிழப்பு. தற்போது வரை தமிழக காவல் துறையில் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். உயிர்தியாகம் செய்தாலும் சாத்தான்குளம் சம்பவம் காவல்துறையினரின் களங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் தமிழக போலீசார்… சாத்தான்குளம் டு திருப்பத்தூர் 
ஆம்பூர் இளைஞர் தீக்குளிப்பு

சில தினங்களுக்கு முன் முழு ஊரடங்கையொட்டி, திருப்பத்தூரில் நடந்த சம்பவம் தமிழக காவல்துறையினருக்கு அடுத்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மருந்து வாங்க பைக்கில் சென்ற அந்த இளைஞரின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனால் அந்த இளைஞருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இளைஞர் நடுரோட்டில் தீக்குளித்தார். அவரின் மரண வாக்குமூல வீடியோவால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் யார் மீது தவறு என்று விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. சாத்தான்குளத்தில் தொடங்கிய சர்ச்சை திருப்பத்தூர் வரை நீட்டித்துள்ளது. தமிழக காவல்துறையினரால் பாதிக்கப்படும் சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளது. மாநில மனித உரிமை ஆணையத்தில் தமிழக காவல்துறையினருக்கு எதிரான புகார்கள் குவிந்து கிடைக்கின்றன. மாநில மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்பு தவறு செய்த சில காக்கிகளுக்கு சாட்டையடியாக இருந்துள்ளது. சாத்தான்குளம் சம்பவத்துக்குப்பிறகும் காவல்துறையில் உள்ள சிலரால் ஒட்டுமொத்த காவல்துறைக்கே கெட்ட பெயர் ஏற்பட்டுவருகிறது. அதை திருத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் தமிழக காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் தமிழக போலீசார்… சாத்தான்குளம் டு திருப்பத்தூர் 
இன்ஸ்பெக்டர் தங்கராஜ்,

காவல்துறையிலும் சிலர் தங்களால் முடிந்த சேவைகளை செய்து வருகின்றனர். சென்னை தலைமை செயலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவரும் ராஜேஸ்வரி, காவல் பணியோடு சமூக சேவையிலும் ஈடுபட்டுவருகிறார். சென்னை நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், தலைமைக் காவலர் செந்தில் ஆகியோர் முயற்சியால் இருதய நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை முடிந்து அவர் நலமாக இருந்துவருகிறார். சென்னை அயனாவரம் பகுதியில் சிங்கிள் மதராக இருந்தவர் கொலை செய்யப்பட்டார். அவரின் மகன் அநாதையான போது உதவி கமிஷனர் அவரை தத்தெடுத்தார். இதுபோல காவல் துறையில் இருக்கும் சில நல்ல உள்ளங்கள் உதவிகளை செய்துவருகிறது. அவர்களும் பாராட்டப்படக்கூடியவர்கள்.

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் தமிழக போலீசார்… சாத்தான்குளம் டு திருப்பத்தூர் 

 

– எஸ்.செல்வம்