தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் ஆடும் முதல் போட்டி – IndVsAus

 

தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் ஆடும் முதல் போட்டி – IndVsAus

எளிமையான குடும்ப பின்னணியிலிருந்து, தம் கடும் போராட்டத்தின் வழியாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் தங்கராசு.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதில் டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. அவற்றில் நடந்த முடிந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி பரிதாபமாகத் தோற்றது.

இந்திய பவுலர்களைப் பொறுத்தவரை, முதல் போட்டியில் முகம்மது ஷமி, ஜடேஜா ஆகியோர் மட்டுமே ரன்களைச் சற்று குறைவாகக் கொடுத்தனர். 10 ஓவர்களில் ஷமி 59, ஜடேஜா 63 ரன்கள். இதுவே குறைவு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சைனி 83 ரன்களை வாரிக்கொடுத்தார். சஹல் கொடுத்த ரன்கள் 89.

தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் ஆடும் முதல் போட்டி – IndVsAus

இரண்டாம் போட்டியில் 7 பவுலர்களைப் பயன்படுத்தினார் கோலி. எந்தப் பலனும் இல்லை. மாறாக, ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் இன்னும் அதிகமாகவே ஆனது. இதில் ஹிர்திக் பாண்டியா மட்டுமே ரன்களை அளவாகக்கொடுத்தார். ஜடேஜா வழக்கம்போல ஓவருக்கு 6 ரன்கள் என்பதாக வைத்துக்கொண்டார். சைனி 70 ரன்களையும், பும்ரா 79 ரன்களையும், சஹல் 71 ரன்களையும் வஞ்சகம் இல்லாமல் வாரிக்கொடுத்தனர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் நன்றாக பந்து வீசிய தமிழக வீரர் நடராஜனை மூன்றாம் ஒருநாள் போட்டியில் ஆட வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அந்த முடிவை கோலி எடுப்பாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது.

ஆனால், இன்று ஆடும் இந்திய அணியில் பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன. ஒப்பனிங் வீரர் மயங் அகர்வால் நீக்கப்பட்டு கில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதேபோல, பவுலர்கள் சைனி, சஹல் நீக்கப்பட்டு நடராஜன், குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் ஆடும் முதல் போட்டி – IndVsAus

தமிழக வீர நடராஜன் சேலம் அருகே உள்ள சின்ன கிராமத்தில் பிறந்து, டிஎன்பிஎல் போட்டிகளில் திறமையாக விளையாடி, ஐபிஎல் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்தவர். இந்த ஆண்டு அவர் வீசிய யாக்கர்கள் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஆஸ்திரேலியா டூரில் காத்திருக்கும் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடராஜன் திறமை இன்று அவரை இந்திய அணிக்காக முதல் போட்டியில் விளையாட வைத்திருக்கிறது. இன்று அவரின் ஆட்டத்தை ரசிக்க தமிழகமே ஆவலோடு காத்திருக்கிறது.