‘கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு அரசுப் பணியில் முன் உரிமை’ தமிழ்நாடு முஸ்லீக் லீக் கோரிக்கை

 

‘கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு அரசுப் பணியில் முன் உரிமை’ தமிழ்நாடு முஸ்லீக் லீக் கோரிக்கை

கொரோனா நோய்த் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்தவாறே உள்ளது. தொடக்கத்தில் விமானநிலையம் உள்ள மாநகரங்களில் நோய்த் தொற்று இருந்த நிலை மாறி, தமிழகத்தின் குக்கிராமங்களிலும் நோய்த் தொற்று பரவியிருக்கிறது. ஆனால், இதற்கு இன்னும் தடுப்பு மருந்தோ சிகிச்சைக்கான மருந்தோ கண்டறிய வில்லை. கொரோனாவுக்கான மருத்துவத்தில் பிளாஸ்மா சிகிச்சை பிரதானமாகக் கருதப்படுகிறது. எனவே, அப்படி பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு பிரதிபலனாக அரசு ஒன்றைச் செய்யலாம் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் ‘தமிழ்நாடு முஸ்லீம் லீக்’ கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சில நாடுகள் மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறினாலும் இன்னும் அது அதிகாரபூர்வமாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் அறிகுறிகளைப் பொறுத்து வழங்கப்படும் மருந்துகளைக் கொண்டே கொரோனாவுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

‘கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு அரசுப் பணியில் முன் உரிமை’ தமிழ்நாடு முஸ்லீக் லீக் கோரிக்கை

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. தேசிய அளவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6,35,756 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 3,42,473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த ஒருவர் உடலில் வைரஸை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்திகள் இருக்கும். எனவே, அவர்களின் பிளாஸ்மாவை பிறருக்கு செலுத்துவதன் மூலம் அவரும் விரைவில் வைரஸில் இருந்து குணமடைகிறார். இந்தமுறை பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் இதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. கொரோனாவில் இருந்து குணமடைந்த அனைத்து மக்களுக்கும் தாங்களாகவே பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கைவிடுத்த வண்ணம்உள்ளன.

‘கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு அரசுப் பணியில் முன் உரிமை’ தமிழ்நாடு முஸ்லீக் லீக் கோரிக்கை

பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை கொரோனா நோயாளிகளுக்கு முக்கியமான சிகிச்சையாக பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால் அதிக அளவு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை அனுமதி அளித்த போதிலும், அதனை மேற்கொள்வதில் தொடர் சிகிச்சை நிலவி வருகிறது. மக்களிடம் நிலவும் அச்சத்தை போக்கும் வண்ணம் பிளாஸ்மா தானம் வழங்குவதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் . அதுமட்டுமின்றி பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு பிறமாநில அரசு அறிவித்துள்ள பல்வேறு சலுகைகள் போன்று அரசு வேலையில் முன்னுரிமை, சலுகை ஆகியவற்றை தமிழக அரசு அறிவித்து ஊக்குவிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.