’தெருக்களில் விநாயகர் சிலை வழிபாட்டுக்கு அரசு அனுமதிக்க வேண்டும்’ தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை

 

’தெருக்களில் விநாயகர் சிலை வழிபாட்டுக்கு அரசு அனுமதிக்க வேண்டும்’ தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை

ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது தெருக்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டும். அவை சிறிய அளவு முதல் பிரமாண்ட அளவு வரை பல்வேறு வடிவங்களில் வைக்கப்படும். மூன்று நாள் முதல் பத்து நாள்கள் வரை பொதுமக்கள் அதற்கு வழிபாடு செய்யலாம். இறுதிநாளில் ஊர்வலமாகச் சென்று கடல் அல்லது ஏதேனும் ஒரு நீர்நிலையில் அச்சிலைகளைக் கரைப்பார்கள்.

கொரோனா நோய்த் தொற்றில் புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் உலகில் முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்த நேரத்தில் சென்ற ஆண்டுபோல விநாயகர் சிலை வழிபாடு மற்றும் ஊர்வலம் நடைபெறுமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

’தெருக்களில் விநாயகர் சிலை வழிபாட்டுக்கு அரசு அனுமதிக்க வேண்டும்’ தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை

இது குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவ்ர் வி.எம்.எஸ்.முஸ்தபா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ’வருகிற 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி வரவுள்ளது. அதற்கு முன்னதாக விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு, சிலைகளை தயாரித்து விற்பனைக்காக வைப்பது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆங்காங்கே இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிகம் உள்ளனர். மேலும் சிலைகளை ஒரு இடத்தில் மொத்தமாக வாங்கி வந்து சாலையோரம் வைத்து விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி கிடைக்குமா? ஊர்வலம் நடைபெறுமா? என்பது சந்தேகமாக உள்ளது. இதனால் சிலை தயாரிப்பு தொழிலாளர்களும் விநாயகர் சிலைகளை தயாரித்து வைத்து அரசின் உத்தரவிற்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

’தெருக்களில் விநாயகர் சிலை வழிபாட்டுக்கு அரசு அனுமதிக்க வேண்டும்’ தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை

இன்று சில நாட்களே விநாயகர் சதுத்தி உள்ள நிலையில் இந்து சகோதரர்கள் இந்த பண்டிகையை கொண்டாட முடியுமா என கவலையில் உள்ளனர். மேலும் வீதிகள் தோறும் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து இந்து சகோதரர்கள் வழிபாடு வழக்கம். உருவ வழிபாடு என்பது இஸ்லாம் மார்க்கம் இல்லையென்றால், பிறமத வழிபாடுகளை மதிக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இஸ்லாம் மார்க்கம் அறிவுறுத்துகிறது.

அந்த வகையில் இந்துசகோதர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வண்ணம் தமிழகத்தில் வீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். மேலும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க ஊர்வலமாக செல்வதை தவிர்க்கும் பொருட்டு, புதிய வழிமுறைகளை வகுத்து, தனிமனித இடைவெளியுடனும், முக கவசம் அணிந்தும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டுமென மீண்டுமொரு முறை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.