மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்குத் தமிழக எம்.பியின் அவசரக் கடிதம்!

 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்குத் தமிழக எம்.பியின் அவசரக் கடிதம்!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்குத் தமிழக எம்.பியின் அவசரக் கடிதம்!

மருத்துவக் கல்வியில் முதுநிலை படிப்பில் ஒ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லை என்ற முடிவுக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதி மன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இறுதியில் 27 சதவிகிதம் ஒ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.. ஆயினும் இது இந்தியா முழுமைக்குமா அல்லது தமிழகத்திற்கு மட்டுமா என்று தெளிவு இல்லை. இந்நிலையில் அயல்நாடுகளில் மருத்துவம் படித்து வருபவர்களுக்கு இந்தியாவில் வைக்கப்படும் தேர்வு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்குத் தமிழக எம்.பியின் அவசரக் கடிதம்!

அக்கடிதத்தின் சுருக்கமாக, ‘அயல்நாடுகளில் எம்பிபிஎஸ் படித்துத் திரும்புகிறவர்களுக்கு மத்திய அரசு ஒரு தகுதித் தேர்வை (FMGE) நடத்துகிறது. அதில் 50 % மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. அதன்பிறகே டாக்டராகத் தொழில் செய்ய முடியும். கடந்த 2012 க்கும் 2018 க்கும் இடையிலான ஆண்டுகளில் அந்தத் தகுதித் தேர்வில் 84% பேர் தோல்வி அடைந்துள்ளனர். இது மிகப்பெரும் அநீதி. சில ஐரோப்பிய நாடுகளில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு இந்தத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இப்படிப் பாரபட்சம் காட்டுவது சட்ட விரோதம்.

மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு போலவே இதுவும் முக்கியமான பிரச்சனை. இதை அனைத்து கட்சிகளும் எழுப்பவேண்டும்” என்று சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். .