ரியல் எஸ்டேட் அதிபருடன் மோதல்; துப்பாக்கிச் சூடு!’- புழலில் கம்பி எண்ணும் திமுக எம்எல்ஏ

 

ரியல் எஸ்டேட் அதிபருடன் மோதல்; துப்பாக்கிச் சூடு!’- புழலில் கம்பி எண்ணும் திமுக எம்எல்ஏ

ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

ரியல் எஸ்டேட் அதிபருடன் மோதல்; துப்பாக்கிச் சூடு!’- புழலில் கம்பி எண்ணும் திமுக எம்எல்ஏ

சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் குமாருக்கு சொந்தமாக திருப்போரூர் அடுத்த செங்காடு பகுதியில் காலிமனை உள்ளது. இந்த இடத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பள்ளம் தோண்டியதுடன், அவரை நிலத்துக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இது தொடர்பாக திருப்போரூர் காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்தார். பின்னர் காரில் திரும்பிக் கொண்டிருந்த குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, இமயம் குமாருடன் வந்த கும்பல் திடீரென எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளது. பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், குமாரின் உதவியாளர் இமயம் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில், திமுக எம்.எல்.ஏ இதயவர்மன், அவரது தந்தை லட்சுமிபதி உட்பட 10 பேர் மீதும், குமார் தரப்பினர் 50க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் அதிபருடன் மோதல்; துப்பாக்கிச் சூடு!’- புழலில் கம்பி எண்ணும் திமுக எம்எல்ஏ

மேலும், இதயவர்மனிடம் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் கைதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள எம்.எல்.ஏ இதயவர்மன் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எஸ்.பி கண்ணன் தெரிவித்தார். இதற்கிடையில் இந்த கோஷ்டி மோதல் தொடர்பாக எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட செங்கல்பட்டு நீதிமன்றம் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்பட 7 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்ளிட்ட 7 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.