பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

 

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகிக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 7 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. அதில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். ஆனால் அந்தத் தொகுதி உட்பட எந்த தொகுதியிலும் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறவில்லை.

அதிமுக கூட்டணிக்கே கிடைத்தது ஒரே ஒரு இடம் தேனி மட்டுமே. அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி இந்த சட்டமன்ற தேர்தலும் தொடர்கிறது என்று பல இடங்களில் கூறியிருந்தார். அதனால் பாமகவும் இந்த கூட்டணியில் நீடிக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதை உறுதியாக பாட்டாளி மக்கள் கட்சி எங்குமே வெளிப்படுத்தவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என ராமதாஸ் தெரிவித்துவருகிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாசை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசிவருகின்றனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், அன்பழகன் ஆகியோர் தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். 20% வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு நாளைக்குள் முடிவெடுக்க, பாமக கோரியிருந்த நிலையில் இந்த திடீர் சந்திப்பு நடந்துவருகிறது.