இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு !

 

இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு !

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு !

தமிழக அரசின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதேபோல் கேரளா, புதுச்சேரி ,அசாம் ,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அங்கும் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வரும் தேர்தல் ஆணையம், கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அத்துடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டதும், அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு !

அத்துடன் கடந்த 24 ஆம் தேதி 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை மற்றும் முன் தயாரிப்பு பணிகள் குறித்து சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. இதில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது? வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு !

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது. தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அதில் தமிழகம், புதுச்சேரி ,கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று அறிவிக்கப்பட உள்ளது.