தொய்வடைந்த வாக்குப்பதிவு : பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரம் இதுதானாம்!!

 

தொய்வடைந்த வாக்குப்பதிவு : பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரம் இதுதானாம்!!

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரத்தை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7மணிவரை நடைபெறுகிறது. 234 தொகுதிகளில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் காலை முதல் அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

தொய்வடைந்த வாக்குப்பதிவு : பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரம் இதுதானாம்!!

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.35 % வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நாமக்கலில் 59.73% % வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக நெல்லையில் 41.58% வாக்குகள் பாதிவாகியுள்ளன. அத்துடன் தமிழக சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சென்னையில் 46.04% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளனர்.

தொய்வடைந்த வாக்குப்பதிவு : பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரம் இதுதானாம்!!

காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 20.23 சதவீதமும் குறைந்தபட்சமாக நெல்லையில் 9.93 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 11 மணி நிலவரப்படி 26.29 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.61 % வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.