பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

 

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

2021 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இம்முறை கொரோனா காரணமாக ச பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்படும் கூட்டத்தை ஆளுநர் உரையாற்றி தொடங்கி வைக்கிறார். தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற்றால் முறையான சமூக இடைவெளியை பின்பற்ற இயலாது என்பதால் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட உள்ள நிலையில் , இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத்தொடர் என்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

ஆளுநர் உரையாற்றிய பிறகு அவை ஒத்திவைக்கப்படும் . இதை தொடர்ந்து அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட அலுவல் குழு உறுப்பினர்கள் கூடி எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு எடுப்பர்.

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள் ,அலுவலக ஊழியர்கள் , பத்திரிகையாளர்கள் என பலர் கலந்துகொள்ள உள்ள நிலையில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என முடிவான பிறகே கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். அத்துடன் அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் காரசார விவாதங்கள்நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.