எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழகம்!

 

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழகம்!


எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதாக தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்ததால் இந்த சாதனையைப் படைக்க முடிந்தது என்று தமிழக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலேயே கல்வியில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடம் எனக் கல்வி தொடர்பான எதுவாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வந்தால் சிறந்தது கிடைக்கும் என்ற எண்ணம் இந்தியா முழுக்க உள்ளது. இந்தியாவின் பல பிரபலங்கள் தமிழகத்தில் படித்துச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழகம்!


தற்போது புதிய கல்விக் கொள்கையில் 12ம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையை 50 சதவிகிதம் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இது 49 சதவிகிதமாக இருந்தது. அதாவது, புதிய கல்விக் கொள்கையின் இலக்கை தமிழகம் எப்போதோ நெருங்கிவிட்டது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு தமிழக அரசும் தமிழக மக்களும் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம்தான் காரணம். பல ஆண்டுகளாக தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாக இருந்தாலும், அதன் நிலை இறங்கிவிடாமல் இருக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
தமிழகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளே கல்வியிலும் தமிழகம் சிறந்து விளங்கக் காரணம் என்று கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழகம்!


மத்திய கல்வித் துறை (மனிதவள மேம்பாட்டுத் துறை) அமைச்சகம், தலைசிறந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில், இந்தியாவின் தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் 34 இடங்களைத் தமிழகம் பிடித்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே அதிகமான சிறந்த பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழகம்!

மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸ் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தலைசிறந்த 20 கட்டிடக்கலை கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 4 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன. தலைசிறந்த 40 மருத்துவக்கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 7 மருத்துவக்கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன. இதில்,

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழகம்!

வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி இந்தியாவிலேயே சிறந்த மூன்றாவது மருத்துவக் கல்லூரியாக திகழ்கிறது. இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 18 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன. இதில் கோவை அம்ரிதா பல்கலைக்கழகம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. டாப் 100 கல்லூரிகளின் பட்டியலில் 18 இடங்களைத் தமிழகம் பிடித்துள்ளது.
இப்படி பொறியியல், கட்டிடக்கலை, மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து துறை சார்ந்த கல்வி நிறுவனங்களிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது. தமிழக அரசின் சீறிய முயற்சியால், உயர் கல்வி சேர்க்கையில் பாலின வேறுபாட்டையும் தமிழகம் கடந்து உள்ளது. உயர் கல்வி சேர்க்கையில் ஆண்களின் சதவிகிதம் 49.8 ஆகவும், பெண்களின் சதவிகிதம் 48.3 ஆகவும் உள்ளது. இதிலும், தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது.