“இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது” – முதல்வர் பழனிசாமி

“இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது” – முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது” – முதல்வர் பழனிசாமி

சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “நோய் நாடி, நோய் முதல்நாடி என்ற திருக்குறளின்படி நலமான மாநிலமே, வளமான மாநிலமாக திகழும். தமிழகத்தில் பல முக்கிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் முறையாக, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் 18 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழகம் திகழ்கிறது. அனைவர்க்கும் இலவச மருத்துவசேவை கிடைக்க அரசு பாடுபடுவதால் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது.

“இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது” – முதல்வர் பழனிசாமி

தமிழகம் கடந்த 5 ஆண்டுகளாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து மத்திய அரசின் விருதை பெற்று வருகிறது. தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதன் மூலம் கூடுதலாக 1,650 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன – முதலமைச்சர்கொரோனா காலக்கட்டத்திலும் அதிகளவில் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது.பிரசவத்தின்போது குழந்தை இறப்பு சதவிகிதம் குறைந்துள்ளது” என்றார்.