தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல்!

 

தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல்!

தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 2ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வந்த இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபாலால் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்த்தொடரின் போது முதல்வர் பழனிசாமி விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த 13 ஆம் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடியது. இதில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல்!

இந்நிலையில் தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. ஆளும் அதிமுக அரசி கடைசி பட்ஜெட் இது என்பதால் தமிழக நிதியமைச்சரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.