“மெட்ரோ ரயிலை மெதுவா விடலாமா” -யோசிக்கும் மாநில அரசு

 

“மெட்ரோ ரயிலை மெதுவா விடலாமா” -யோசிக்கும் மாநில அரசு

செப்டம்பர் 1 ம் தேதி முதல் மாநில அரசுகள் மெட்ரோ ரயிலை இயக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறிய போதிலும் மாநில அரசு யோசித்து வருகிறது .

“மெட்ரோ ரயிலை மெதுவா விடலாமா” -யோசிக்கும் மாநில அரசு


மத்திய உள்துறை அமைச்சகம் திங்களன்று மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் மெட்ரோரயிலை இயக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது .ஆனால் தமிழக அரசு இந்த விஷயத்தில் யோசித்து வருவதாக தெரிகிறது ,ஏனெனில் மெட்ரோ ரயிலை இயக்கினால் கூட்டம் கட்டுக்கடங்காமல் வரும், இதனால் கொரானா பரவும் அபாயம் இருப்பதாக அது யோசிக்கிறது .
ஆனால் ரயில்வே துறையை சேர்ந்த சில நிபுணர்கள் இந்த விஷயத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி ரயிலை இயக்கலாம் என்று கூறியுள்ளனர் .
உதாரணமாக ரயில் பயணிகளுக்கு வெப்ப நிலை பரிசோதனை செய்யலாமென்றும் ,அடிக்கடி ரயிலை கிருமி நாசினி கொண்டு வாஷ் பண்ண வேண்டுமென்றும் ,ரயிலில் பயணிகளை சமூக இடைவெளி விட்டு அமரவைக்கலாமென்றும் ,கூறியுள்ளார்கள்
போக்குவரத்து மன்றத்தின் இயக்குனர் ராமாராவ் கூறுகையில் தங்கள் ஏற்கனவே ஊரடங்குக்கு முன்பாகவே அணைத்து முன்னெச்சரிக்கையுடன் தான் மெட்ரோ ரயிலை இயக்கியதாகவும் .,ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் சானிடைசர் வைத்திருந்ததாகவும் ,அதனால் தகுந்த முன்னெச்சரிக்கையுடனே தாங்கள் மெட்ரோ ரயிலை இயக்க தயாராக இருப்பதாவும் ,அரசின் உத்தரவுக்கு காத்திருப்பதாகவும் ,ஆனால் துணை ரயிலை இயக்கினால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது கடினம் என்றும் கூறினார்

“மெட்ரோ ரயிலை மெதுவா விடலாமா” -யோசிக்கும் மாநில அரசு