5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்கும் தமிழ்நாடு அரசு!

 

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்கும் தமிழ்நாடு அரசு!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை அறிவியலாளர்களும் ஆட்சியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்துகொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது.

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்கும் தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டிற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகளே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்குப் போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை (டெண்டர்) கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்கும் தமிழ்நாடு அரசு!

மொத்தமாக 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் வேண்டும் என்றும், அந்த ஊசிகள் 90 நாட்களில் கிடைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கோரியிருக்கிறது. ஜூன் 5ஆம் தேதிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை வாங்கி குவித்தாலும் மக்களிடம் நிலவும் தடுப்பூசி மீதான தயக்கத்தை உடைப்பதே தமிழ்நாடு அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கும். தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வுக்கு மக்களைத் தயார்படுத்தாமல் அது சாத்தியமில்லை.