• April
    06
    Monday

Main Area

Main



விஜயை பழிவாங்குகிறது தமிழக அரசு ! சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு !

சீமான்
சீமான்

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது விஜய் பேசியதற்காக பழிவாங்கும் எண்ணத்தில்தான் அவரது படம் திரையிடுவதற்கு பல்வேறு இடையூறு ஏற்படுத்துவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏ.ஜி.எஸ். நிறுவன தயாரிப்பில், ஏ.ஆர். ரகுமான் இசையில், அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கான சிறப்புக் காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டு டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையில் நேற்று முன்தினம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பிகில் உள்பட எந்த திரைப்படத்திற்கும் சிறப்புக் காட்சிகள் அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். மேலும் இது குறித்து அனைத்து திரையரங்குகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார். இதனால் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிகளை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

seeman and vijay

இந்த பிரச்சனைக்கு கருத்து தெரிவிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதற்கு வன்மம் வைத்துதான் தமிழக அரசு பழிவாங்குகிறது. விஜய் பேசிய கருத்துக்கு எதிர் கருத்துக்களை பலரும் தெரிவித்து விட்டார்கள். அதன் பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்வது நன்றாக இருக்காது. இதனால் இன்றைய தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு உண்டாகி விடும் என தெரிவித்தார். மேலும் செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் அதிகாரத்தினர், அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது என பேசினார் சீமான்.

2018 TopTamilNews. All rights reserved.