“விவசாயிகளை கொலைக்காரர்களாக தமிழக அரசு சித்தரிக்கிறது” – பி.ஆர்.பாண்டியன்

 

“விவசாயிகளை கொலைக்காரர்களாக தமிழக அரசு சித்தரிக்கிறது” – பி.ஆர்.பாண்டியன்

தமிழக அரசு விவசாயிகளை கொலைகாரர்களாக சித்தரிக்கிறது என்று விவசாய சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

“விவசாயிகளை கொலைக்காரர்களாக தமிழக அரசு சித்தரிக்கிறது” – பி.ஆர்.பாண்டியன்

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் டிராக்டர் பேரணி நடந்தது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் மாசிலாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர். இதில் தடையை மீறி பேரணி நடத்தியதாக 3 எம்எல்ஏக்கள் உள்பட 660 பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக அவர்கள் மீது கொலை முயற்சி, நோய் பரப்புதல், சட்டவிரோதமாக ஒன்று கூடியது,போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

“விவசாயிகளை கொலைக்காரர்களாக தமிழக அரசு சித்தரிக்கிறது” – பி.ஆர்.பாண்டியன்

இந்நிலையில் நேற்று மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன், டெல்லியில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி போராடிய விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு ஆதரவாக திருவாரூரிலும் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினார்கள். ஆனால் டிராக்டர் பேரணி நடத்தியவர்கள் மீது தமிழக அரசு கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. விவசாயிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்திருப்பது தமிழக அரசு, விவசாயிகளை கொலைக்காரர்களாக சித்தரிக்கும் போக்காகவே காணப்படுகிறது. தமிழக முதல்வர் திட்டமிட்டு விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் உள்ள உறவை சீர்குலைக்கிறார். இந்த போக்கை அரசு கைவிட வேண்டும் ” என்றார்.