செப் 1ம் தேதி முதல் 50% மாணவர்களுடன் பள்ளிகளைத் திறக்கலாம் – தமிழக அரசு உத்தரவு!

 

செப் 1ம் தேதி முதல் 50% மாணவர்களுடன் பள்ளிகளைத் திறக்கலாம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் செப்-1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதன் காரணமாக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ,முதல்வர் மு.க ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டால் எடுக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதேசமயம் சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

செப் 1ம் தேதி முதல் 50% மாணவர்களுடன் பள்ளிகளைத் திறக்கலாம் – தமிழக அரசு உத்தரவு!

ஏற்கனவே செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மக்கள் நல்வாழ்வுத்துறை. தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9, 10 ,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு என கூறப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செப் 1ம் தேதி முதல் 50% மாணவர்களுடன் பள்ளிகளைத் திறக்கலாம் – தமிழக அரசு உத்தரவு!

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறந்தால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு :

* பள்ளிகளில் ஒரு நேரத்தில் ஒரு வகுப்பில் 50% மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்

* முதல் நாளில் 50 சதவீத மாணவர்களும் மறுநாளில் 50 சதவீத மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வரவேண்டும்.

*பள்ளி ஆசிரியர்கள். ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்

* அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும்

* பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு விட்டமின் சி மாத்திரை, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும்

* அனைத்து வகுப்பறைகளிலும் சனிடைசர் சோப்பு கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

* நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை

*6 அடி இடைவெளி கட்டாயம்; சூழலுக்கேற்ப திறந்தவெளியில் வகுப்புகளை நடத்தலாம்