முதலாளியின் வருமானத்தைக் காக்க தன் மானத்தை அடகு வைத்த தமிழக அரசு! – கமல் நினைவஞ்சலி

முதலாளியின் வருமானத்தைக் காக்க தன் மானத்தை அடகு வைத்த தமிழக அரசு! – கமல் நினைவஞ்சலி

தன் மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல், முதலாளியின் வருமானத்தை காக்க, தன் மானத்தை அடகு வைத்த தமிழக அரசு என்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு இரண்டாம் ஆண்டு அஞ்சலி செலுத்தியிருக்கிறார் கமல்.

முதலாளியின் வருமானத்தைக் காக்க தன் மானத்தை அடகு வைத்த தமிழக அரசு! – கமல் நினைவஞ்சலி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் இரண்டாம் ஆண்டு இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்ட ட்வீடில், “மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது” என்று கூறியுள்ளார்.