உங்களின் சேவை எங்களுக்கு தேவை! விஜயபாஸ்கரை அழைத்துக்கொண்ட ஸ்டாலின்

 

உங்களின் சேவை எங்களுக்கு தேவை! விஜயபாஸ்கரை அழைத்துக்கொண்ட ஸ்டாலின்

3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது

உங்களின் சேவை எங்களுக்கு தேவை! விஜயபாஸ்கரை அழைத்துக்கொண்ட ஸ்டாலின்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளுக்கும் இக்குழுவில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் மருத்துவர் எழிலன், அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸ் சார்பில் ஏ.எம். முனிரத்தினம், பாஜக – நயினார் நாகேந்திரன், பாமக – ஜி.கே.மணி ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளானர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை பெற அவ்வப்போது இந்த குழு விவாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் படி இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.