தமிழக தொழிலாளர்களை ஆந்திரா அழைத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி!

 

தமிழக தொழிலாளர்களை ஆந்திரா அழைத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி!

கொரொனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து நாடு முழுக்கவே லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. அதில் ஓரிரு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் இன்றுவரை லாக்டெளன் நீடிக்கவே செய்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனங்கள் சில, தங்களின் தொழிலாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களை ஆந்திரா அழைத்துச் செல்ல அனுமதி கோரியது. அதைப் பரிசலித்து நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

தமிழக அரசு அளித்துள்ள செய்திக்குறிப்பில், ’ ஆந்திராவில் உள்ள ஜப்பான் தூதரகம் மற்றும் ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் தமிழகத்திலிருந்து தொழிலாளர்களை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டிருந்தன. குறிப்பாக, தமிழகத்திற்கு அருகே உள்ள மாவட்டங்களுக்கு)

தமிழக தொழிலாளர்களை ஆந்திரா அழைத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி!

மேலும், அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் சித்தூர் மாவட்டத்திற்கு தொழிலாளர்களை அழைத்துச்செல்ல கோரியதற்கு நெல்லூர், சித்தூர் மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி கொடுத்திருந்தனர். ஆந்திரா ஸ்ரீசிட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழ்நாட்டிலிருந்து வேலையாட்கள் தினமும் சென்று வரை அனுமதி கேட்டிருந்தன.

‘தனிநபர்களின் பெயரில் அல்லாது அந்தந்த நிறுவனங்கள் பெயரி இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அது நீட்டிப்படக்கூடிய வசதியுள்ளதாக இருக்க வேண்டும். தொழிலாளர்களை அழைத்துச் செல்லவும் திரும்ப கொண்டு விடவும் இரு சக்கரங்களுக்கு அனுமதி பாஸ் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தன.

இந்தல் கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்று சில நிபந்தனையுடன் ஆணையிடுகிறது. அதன்படி, தமிழகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படும் ஆட்கள் பணியாற்றும் கம்பெனி இருக்கும் மாவட்டத்தின் கலெக்டர் அந்த மாதாந்திர பாசை வழங்க வேண்டும். மாதந்தோறும் அவர்தான் அதை புதுப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது,