புதிய நோயாளிகள் அதிகரிப்பில் தமிழ்நாடு மீண்டும் நான்காம் இடத்தில்!

புதிய நோயாளிகள் அதிகரிப்பில் தமிழ்நாடு மீண்டும் நான்காம் இடத்தில்!

கொரோனா நோய்த் தொற்றால் உலகமே திண்டாடி வருகிறது. அதிகப் பாதிப்புள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 63 லட்சத்து 94 ஆயிரத்து 365 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 74 லட்சத்து 41 ஆயிரத்து 718 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 60 ஆயிரத்து 463 பேர்.

புதிய நோயாளிகள் அதிகரிப்பில் தமிழ்நாடு மீண்டும் நான்காம் இடத்தில்!

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 77,76,224 பேரும், இந்தியாவில் 68,35,655 பேரும், பிரேசில் நாட்டில் 50,02,357 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தியாவில் கோவிட் பரிசோதனையில், தற்போது நாள் ஒன்றுக்கு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 12 லட்சம் (11,94,321) பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 8.34 கோடியாக அதிகரித்துள்ளது.

புதிய நோயாளிகள் அதிகரிப்பில் தமிழ்நாடு மீண்டும் நான்காம் இடத்தில்!

ஒரே நாளில் 83,011 பேர் குணமடைந்த நிலையில், 78,524 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58,27,704-ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 17 நாட்களாக 10 லட்சத்துக்கும் கீழ் உள்ளது. நாட்டில் தற்போது 9,02,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிய நோயாளிகள் அதிகரிப்பில் தமிழ்நாடு மீண்டும் நான்காம் இடத்தில்!

குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைந்தோர் சதவிகிதம் 85.25%-மாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,524 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது, 971 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலங்களைப் பொறுத்தவரை புதிய நோயாளிகளின் பட்டியலில் தமிழ்நாடு நான்காம் இடத்தில் உள்ளது. சில நாட்களாக ஐந்தாம் இடத்தில் இருந்தது. தற்போது மீண்டும் நான்காம் இடத்திற்கு வந்து விட்டது.

புதிய நோயாளிகள் அதிகரிப்பில் தமிழ்நாடு மீண்டும் நான்காம் இடத்தில்!

மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாம் இடத்திலும், கேரளா மூன்றாம் இடத்திலும் உள்ளன. ஆந்திரா ஐந்தாம் இடத்திலும் மேற்கு வங்கம் ஆறாம் இடத்திலும் உள்ளன.