விருப்பப்பட்டால் வேளாண் சட்டத்தை தமிழக விவசாயிகள் பயன்படுத்தலாம்: முதல்வர் பேச்சு!

விருப்பப்பட்டால் வேளாண் சட்டத்தை தமிழக விவசாயிகள் பயன்படுத்தலாம்: முதல்வர் பேச்சு!

மழையால் பாதிப்படைந்த இடங்களை முதல்வர் பழனிசாமி நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார். காலை நாகை மாவட்டத்துக்கு சென்று நிவாரண உதவிகள் வழங்கிய முதல்வர், அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு புறப்பட்டார். அங்கு மழையால் நாசமடைந்த பயிர்களை வயலில் இறங்கி ஆய்வு செய்த அவர், உரிய இழப்பீடு வழங்கப்படும் என விவசாயிகளுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

விருப்பப்பட்டால் வேளாண் சட்டத்தை தமிழக விவசாயிகள் பயன்படுத்தலாம்: முதல்வர் பேச்சு!

அதன் பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் இருப்பதால் தான் தமிழக அரசு வரவேற்கிறது என்றும் மற்ற மாநிலங்களில் இடைத்தரகர்கள் இருப்பதால் அதை அகற்ற மத்திய அரசு இச்சட்டங்களை கொண்டு வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் விளைபொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்கவேண்டும் என்பதே அரசின் நோக்கம் என தெரிவித்த முதல்வர், விருப்பப்பட்டால் மட்டுமே வேளாண் சட்டங்களை தமிழக விவசாயிகள் பயன் படுத்தலாம் என்றும் கூறினார்.