தமிழக தேர்தல் – திமுகவுக்கு ‘செக்’ வைக்கும் ‘பாஜக’வின் வீடியோ

 

தமிழக தேர்தல் – திமுகவுக்கு ‘செக்’ வைக்கும் ‘பாஜக’வின் வீடியோ

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேலைகளில், அனைத்து கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.கூட்டணி வியூகம், தேர்தல் அறிக்கை. பிரச்சார பயணம் மற்றும் ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழக தேர்தல் – திமுகவுக்கு ‘செக்’ வைக்கும் ‘பாஜக’வின் வீடியோ

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பாஜகவும் வரிந்து கட்டிக் கொண்டு வேலைகள் செய்து வருகிறது. இதில் தமிழக தேர்தலை மையமாக வைத்து டெல்லி பாஜக மேலிடமும் சில முக்கியப் பணிகளைச் செய்து வருகிறது.

தமிழக தேர்தல் – திமுகவுக்கு ‘செக்’ வைக்கும் ‘பாஜக’வின் வீடியோ


முன்னதாக பிரதமர் மோடி ஒருமுறை இலங்கை சென்றார். அங்கு தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்கு சென்ற அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இது சம்பந்தமான சில ‘வீடியோ’க்களை, பா.ஜ.க மேலிடம் தயார் செய்துள்ளது. இதுதவிர தமிழக மீனவர்களின் நலனுக்காக, இலங்கையுடன், பா.ஜ., அரசு செயல்படுத்திய திட்டங்களும், இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக தேர்தல் – திமுகவுக்கு ‘செக்’ வைக்கும் ‘பாஜக’வின் வீடியோ


மேலும் தமிழகத்திற்கு மோடி அரசு செய்துள்ள நன்மைகள் மற்றும் அவரது தமிழகத்து வருகை ஆகியனவும் வீடியோ தொகுப்புகளாக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோக்களைப் பார்த்து, பிரதமர், ‘ஓகே’ சொல்லியுள்ளார்.தேர்தலுக்கு முன்பாகவே இந்த வீடியோக்கள் வெளியாக உள்ளன.

தமிழக தேர்தல் – திமுகவுக்கு ‘செக்’ வைக்கும் ‘பாஜக’வின் வீடியோ


இலங்கையில் நடந்த இறுதிக்கட்டச் சண்டையின் போதுபோது, காங். கூட்டணியில் இருந்த தி.மு.க., வாய் மூடி இருந்ததை,நினைவுபடுத்தும் வகையில், இந்த வீடியோக்களை வெளியிட, பா.ஜ. மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது..