“நெருங்கும் தேர்தல்; ரஜினிக்கு வீடு தேடி வந்த விருது”

 

“நெருங்கும் தேர்தல்; ரஜினிக்கு வீடு தேடி வந்த விருது”

தேர்தல் நெருங்கி வரும் நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.

“நெருங்கும் தேர்தல்; ரஜினிக்கு வீடு தேடி வந்த விருது”

தமிழ் திரைத்துறையில் ரஜினிகாந்த் இன்றளவும் உச்ச நட்சத்திரமாகவே இருந்து வருகிறார். இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் இதுவரை சுமார் 150ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இருந்த சூழலில் மத்திய அரசின் இந்தாண்டிற்கான 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது என்ற அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“நெருங்கும் தேர்தல்; ரஜினிக்கு வீடு தேடி வந்த விருது”

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கி திரைப்பட பணிகளில் ஈடுபட்டு வரும் ரஜினியை வளைக்கவே மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதா? என்று பலரும் கேள்வி எழுப்பும் முன்னரே இதுகுறித்து விளக்கத்தையும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். தமிழக தேர்தலையொட்டி ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு, தமிழக தேர்தலுக்கும் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்ட விருதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.