“உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி” : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

“உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி” : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

தமிழக முதல்வர் பழனிசாமி தேசிய விவசாய தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி” : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

ஆண்டுதோறும் டிசம்பர் 23ம் தினம் தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான். விவசாயம் வளர்ந்தால் தான், தேசம் வளரும். “விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும்” என்ற பழமொழியும் பலரும் அறிந்த ஒன்று.

“உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி” : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “”உழந்தும் உழவே தலை” உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த “தேசிய விவசாய தின நல்வாழ்த்துகளை” அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதுவொருபுறமிருக்க மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 28வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் தலைநகரில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று தேசிய விவசாய தினம் கொண்டாடப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.