‘தமிழக முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை’ அரசு விளக்கம்

 

‘தமிழக முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை’ அரசு விளக்கம்

கொரோனா தொற்று இந்தியாவில் கடந்த மாதத்தை விட அதிகளவில் பரவிவருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவும் வேகம் அதிகமாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை சென்ற வாரத்தை விட, கடந்த சில நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்துவருகிறது. ஆயினும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் எனும் எண்ணிக்கையில்தான் நிலைமை உள்ளது.

இந்த நிலைமையில் நேற்று முதலமைச்சர் அலுவலப் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அது தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை செய்தி மக்கள் தொடர்புத் துறை அளித்துள்ளது.

‘தமிழக முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை’ அரசு விளக்கம்

அந்தச் செய்திக்குறிப்பில், ‘அரசு, கொரோனா நோய்த் தொற்றினை கண்டறிய, இதுவரை தமிழ்நாடு முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

‘தமிழக முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை’ அரசு விளக்கம்
cm palanisami

இதன் ஒரு பகுதியாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 13.7.2020 அன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. மேலும், முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது.’ என்று தெரிவித்துள்ளது.