‘தினமும் 48,000 கொரோனா டெஸ்ட்டுகள் எடுக்கிறோம்’ பிரதமரிடம் தமிழக முதல்வர் அப்டேட்

 

‘தினமும் 48,000 கொரோனா டெஸ்ட்டுகள் எடுக்கிறோம்’ பிரதமரிடம் தமிழக முதல்வர் அப்டேட்

கொரோனா நோய் தொற்று கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கி இப்போது உலகம் முழுவதும் பரவி வல்லரசு நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் மார்ச் மாத மத்தியிலிருந்து பரவல் அதிகரித்தது. மகாராஷ்டிராவில் அதிகளவில் நோய்த் தொற்று பாதிப்பு உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் தமிழ்நாடு உள்ளது.

தமிழ்நாட்டில் தொடக்கத்தில் விமான நிலையங்கள் இருக்கும் மாநகரங்களில் அதிக தொற்று இருந்த நிலை முற்றிலும் மாறி, இப்போது குக்கிராமம் வரையில் கொரோனாவின் ஆதிக்கம் பரவிவிட்டது. கொரோனா பாதிப்பு ஆயிரம் பேரைக் கடந்த மாவட்டங்கள் நாள்தோறும் அதிகரித்துவருகின்றன.

‘தினமும் 48,000 கொரோனா டெஸ்ட்டுகள் எடுக்கிறோம்’ பிரதமரிடம் தமிழக முதல்வர் அப்டேட்

இந்நிலையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தொலைப்பேசியில் பேசி தமிழகத்தில் எடுத்துவரும் கொரோனா தடுப்புப் பணிகள் பற்றி விவரித்ததாக செய்தி மக்கள் தொடர்புத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், ‘இன்று (19.07.2020) காலை மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை விவரங்கள் குறித்து
கேட்டறிந்தார்கள்.

‘தினமும் 48,000 கொரோனா டெஸ்ட்டுகள் எடுக்கிறோம்’ பிரதமரிடம் தமிழக முதல்வர் அப்டேட்

தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிலேயே, அதிகபட்சமாக தற்போது தமிழ்நாட்டில், நாள் ஒன்றுக்கு 48,000 கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு, தமிழ்நாடு அரசு முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாக பாரத பிரதமர் அவர்களிடம் முதலமைச்சர் தெரிவித்தார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.