செவ்வாய்க்கிழமை கூடுகிறது தமிழக அமைச்சரவை! – ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவு?

 

செவ்வாய்க்கிழமை கூடுகிறது தமிழக அமைச்சரவை! – ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவு?

வருகிற செவ்வாய்க்கிழமை தமிழக அமைச்சரவை கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஊரடங்கு உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா குறைந்தபாடில்லை… சென்னையில் கொரோனாத் தொற்று குறைந்தது போல இருந்தாலும், மற்ற மாவட்டங்களில் அசூர வேகத்தில் பரவி வருகிறது. இதனால், கிராமப்புற மக்களுக்கு கூட கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை கூடுகிறது தமிழக அமைச்சரவை! – ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவு?தமிழகத்தில் மீண்டும் ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிப்புக்குள்ளான பகுதியில் ஊரடங்கு தனித்தனியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தேனி, விருதுநகர், திண்டுக்கல் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை கூடுகிறது தமிழக அமைச்சரவை! – ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவு?தமிழக அமைச்சர்கள் மூன்று பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகிற செவ்வாய்க் கிழமை (14ம் தேதி) மாலை 5 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்புப் பணிகளை இன்னும் எப்படி தீவிரப்படுத்துவது, ஊரடங்கு கொண்டுவருவது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.