பிப்.13ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

 

பிப்.13ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

கடந்த 2ம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை, பாலியல் குற்றங்களுக்கான தண்டனை அதிகரிப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு உள்ளிட்ட 8 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட இந்த கூட்டத்தொடர் கடந்த 5ம் தேதியோடு நிறைவடைந்தது.

பிப்.13ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

இதைத் தொடர்ந்து வரும் 22ம் தேதி துணை முதல்வர் ஓபிஎஸ் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகின. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இடைக்கால பட்ஜெட்டில் மாற்றங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதன் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டம் ஆலோசித்து முடிவெடுக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. அதில், இடைக்கால பட்ஜெட் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.